இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் முகேஷ் குமார் மற்றும் ரியான் பராக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Leave feedback about this