இளையராஜா இசையமைத்த ஜமா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
Leave feedback about this