ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 வீரர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸர்பானி 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராசா, ரிச்சர்ட் மற்றும் பிரண்டன் மவுட்டா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லி மத்வீர் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பிரையன் பென்னட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மருமணி மற்றும் தியான் மையர்ஸ் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தியது. இருப்பினும், மருமணி 27 ரன்களிலும், தியான் மையர்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் ஃபராஸ் அக்ரம் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ஃபராஸ் அக்ரம் 13 பந்துகளில் அதிரடியாக 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
Leave feedback about this