மக்களவைத் தேர்தலில் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் மதம் தொடர்புடைய இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாக சமாஜவாதி கட்சி விமர்சித்துள்ளது.
7 மாநிலங்களிலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், இந்தியா கூட்டணி 10 இடங்களிலும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, திமுக -1, ஆம் ஆத்மி -1) பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், இது குறித்து கருத்து சமாஜவாதி கட்சியின் மூத்த எம்.பி. ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளதாவது, மக்களவைத் தேர்தல் உட்பட அனைத்து இடங்களிலும் பாஜகவவை மக்கள் தோல்வி அடையச் செய்தார். அயோத்தி நகரத்தில் உள்ள மக்களவைத் தொகுதியான ஃபைசாபாத், சீதாபூர், சித்திரகூட், நாசிக், ராமேஸ்வரம் உள்ளிட்ட மதரீதியான அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. கடவுள் ராமரும் பாஜகவை புறக்கணித்துள்ளார் என ராம் கோபால் யாதவ் குறிப்பிட்டார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மனோஜ் ஜா, இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம். மற்றொரு தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை, இதே எண்ணிக்கைதான். அதுவும் அவர் சமீபத்தில்தான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்..
ஆட்சியானது, இனிமேலாவது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், பொது நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நிஜம். நாட்டின் மிகப்பெரிய வேலையின்மை. அது குறித்து அவர்கள் (பாஜக) ஒருபோதும் பேசுவதில்லை என மனோஜ் ஜா கூறினார்.