tamiltrends.in Blog Uncategorized ராயன் டிரைலர் தேதி!
Uncategorized

ராயன் டிரைலர் தேதி!


நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், வெளியீட்டுத் தேதி ஜூலை 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ராயன்’ படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. தற்போது, ​​ராயன் படத்தின் டிரைலர் ஜூலை 16 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



Source link

Exit mobile version