தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி – 2 திரைப்படங்கள் இணைந்து 2300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தன. அதில், பாகுபலி – 2 மட்டும் ரூ.1810 கோடியை வசூலித்தது.
அடுத்ததாக, யஷ் நடித்த கேஜிஎஃப் 2 உலகளவில் ரூ.1250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ரூ.1380 கோடியையும் நடிகர் ஷாருக்கானின் படம் ரூ.1050 கோடியும் வசூலித்தது. அதன்பின், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.