மத ரீதியான இடங்களில் பாஜக தொடர் தோல்வி: இந்தியா கூட்டணி
மக்களவைத் தேர்தலில் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் மதம் தொடர்புடைய இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாக சமாஜவாதி கட்சி விமர்சித்துள்ளது. 7 மாநிலங்களிலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இந்தியா கூட்டணி 10 இடங்களிலும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, திமுக -1, ஆம் ஆத்மி -1) பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை ஒருவரும் வெற்றி