ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ள காட்டு யானை: மக்கள் அச்சம்
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது, திடீரென கீழ் முருங்கை வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் யானை தஞ்சம் அடைந்தது. இதையடுத்து சனிக்கிழமை இரவு முதல் தற்போது வரை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது கிருஷ்ணகிரி தருமபுரி பகுதியில் வரவழைக்கப்பட்டுள்ள வேட்டை தடுப்பு வன காவலர்கள் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Source link