March 16, 2025
Uncategorized

ஆயுத தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் வெடிமருந்து தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள DBW பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அபாய கட்டிடத் தொழிலாளி (DBW)

காலியிடங்கள்: 158

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Attendant Operator Chemical Plant(AOCP) டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி, என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவ தொழிற்சாலை தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 + டிஏ வழங்கப்படும்.

வயதுவரம்பு: 15.7.2024 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசுவிதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.munitionsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பொது மேலாளர், ஆர்டன்ஸ் தொழிற்சாலை, பண்டாரா (மாவட்டம்), மகாராஷ்டிரா, பின் – 441 906

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.7.2024



Source link

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video
X