tamiltrends.in Blog Uncategorized காவிரி நீர் திறப்பு: கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்!
Uncategorized

காவிரி நீர் திறப்பு: கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்!


காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுப் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் விடுவிப்பதை கர்நாடக மாநிலம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) ஜூலை 11ஆம் தேதி பரிந்துரை செய்தது.

இக்கூட்டத்தில், ஜூலை 25-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

எனினும், 4 மாநிலங்களின் விரிவான விவாதங்களுக்குப் பிறகு ஜூலை 12-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையின் முடிவில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த இறுதி முடிவை கர்நாடக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Exit mobile version