tamiltrends.in Blog Uncategorized சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன், ஆனால்…: நடிகர் பார்த்திபன்
Uncategorized

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன், ஆனால்…: நடிகர் பார்த்திபன்


டீன்ஸ் படத்துக்கு உரிய மரியாதை கிடைக்கலைன்னா சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன் என்று இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,

நண்பர்கள்

சத்தியமா சொல்றேன்

TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா

நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு அறிவியல் புனைகதை & கற்பனை சிந்தனை ல் எடுக்கப்பட்ட படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.

நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு

வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.

நனைந்த இமைகளோடு

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

13 குழந்தைகளை மையமாகக் கொண்டு பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. பயாஸ்கோப் டிரீம்ஸ் எல்.எல்.பி மற்றும் அகிரா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டீன்ஸ் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Exit mobile version